↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியை 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை ரைனோஸ் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிசிஎல் எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டிகள் ஆண்டு தோறும் நடந்து வருகிறது.

8 அணிகள் பங்கேற்கும் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஜனவரி 10 தொடங்கி பெப்ரவரி 1ம் திகதி வரை நடக்கிறது.
மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத், கொச்சி, ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கர்நாடக புல்டோசர், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், மும்பை ஹீரோஸ், பெங்கால் டைகர்ஸ், வீர் மராட்டி, போஜ்புரி தபாங்ஸ் ஆகிய 8 நட்சத்திர அணிகள் பங்கேற்கின்றன.

சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் கேரளா அணியை இன்று ஹைதராபாத்தில் எதிர்கொண்டது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை ரைனோஸ் 2 விக்கெட்டுக்கு 148 ஓட்டங்கள் எடுத்தது.
சென்னை அணியில் சாந்தனு அரைசதம் அடித்தார். இதனையடுத்து 149 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய கேரள அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 87 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனால் சென்னை அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Video


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top