ஆம்பிள ஆடியோ நிகழ்வில் ஆர்யா பேசுகையில் "விஷால் இந்தப்படத்தை முதல்லே பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணப்போறேன் எண்டு சொன்னார்.. பொங்கலெண்டா பெரிய படங்கள் வருமே எண்டு கேக்க அதுக்கு விஷால் யாரா இருந்தாலும் வெட்டுவேன்" என்று சொன்னதாக கூறினார்.
இதிலிருந்துதான் விஷாலுக்கு தலையிடியே ஸ்ரார்ட் ஆனது. உண்மையிலே விஷாலின் பொங்கல் அறிவிப்பின்போது(சூட்டிங்க் தொடங்கமுதலே) வேறு எந்த படங்களுமே பொங்கல் வெளியீட்டை உறுதி செய்யவில்லை.. விஷாலின் அந்தக்கருத்து பொதுவானதே!! சொல்லும்போது யாரையும் இலக்கு வைத்து சொல்லவில்லை என்பதே உண்மை.
எனினும், பொங்கலுக்கு முதலில் அஜித் படமும் வெளியாக இருந்தத சமயத்தில் ஆர்யா கூறியதால் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர் அஜித் ரசிகர்கள். அப்பவே நெகடிவ் கருத்துக்களை ஆம்பிளைக்கு சொல்ல தொடங்கின அஜித் ரசிகர்கள் இன்று அட்வான்ஸ் புக்கிங் வரை கலாய்ச்சுக்கொண்டே இருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment