↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் தெலுங்கில் 'ராகவன் பி.டெக்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு கடந்த புத்தாண்டு தினத்தில் வெளியாகியது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. வெளியான முதல் நாளிலேயே ரூ.1கோடி வசூல் செய்து அதிக வசூல் செய்த டப்பிங் பட லிஸ்ட்டில் ராகவனும் சேர்ந்து கொண்டது.

தனுஷ், அமலாபால் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை தெலுங்கில் ஷரவந்தி மூவீஸ் என்ற நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.

வெறும் ரூ.8 கோடி பட்ஜெட்டில் தயாரான வேலையில்லா பட்டதாரி தமிழில் மட்டும் ரூ.50 கோடி சம்பாதித்தது. இந்நிலையில் தெலுங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தயாரிப்பாளர் தனுஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top