↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சென்னை: கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, ‘இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன்‘ என்று அறிக்கை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் பூனம் பாண்டே. இவரது அரை நிர்வாண படங்களும் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இவர் தற்போது  ‘மைதிலி அன் கோ’ என்ற படத்தில் நடிக்கிறார். 

இதில் அவருடன் பாண்டியராஜன், சுமன், துப்பாக்கி வில்லன் ஜாகீர்உசேன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு  சி.ராம், பாடல்கள்   சினேகன், இந்து, வசனம் வேலுமணி. படத்துக்கு  இசை அமைத்து இயக்கும் வீரு.கே. கூறியதாவது:இந்த படம் வித்தியாசமான கதை களம் கொண்டது. சினிமா துறையில் ஒரு பெண் நினைத்தால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு இந்தப் படம் எடுத்துக்காட்டாக இருக்கும். நாயகியை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. நாயகி இருக்கும் ஊரில் தீவிரவாத கும்பல் ஒன்று வெடிகுண்டு வைக்க திட்டம் தீட்டுகிறார்கள். இதை அறிந்த நாயகி அதை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் கதை. விரைவில் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top