↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
”இனி மேல் இப்படி செய்தால்”! ரசிகர்களுக்கு அஜித், விஜய் கொடுத்த அறிக்கை - Cineulagam


தமிழ் சினிமாவில் இந்த நடிகர்களின் ரசிகர்கள் பிரச்சனை என்று தான் தீருமோ? தெரியவில்லை. கடந்த 3 நாட்களாக சமூக வலைத்தளமான டுவிட்டரில் அஜித், விஜய் ரசிகர்களின் சண்டை எல்லோரும் முகம் சுழிக்கும் அளவிற்கு சென்று விட்டது.
தங்கள் ரசிகர்களை புகழ்ந்து பேசினால் கூட பரவாயில்லை, மிகவும் மட்டமான டாக்குகளை கிரியேட் செய்து நடு நிலையாளர்கள் யாரும் டுவிட்டர் பக்கம் வரக்கூடாது என்று அவர்களை நினைக்க வைத்து விட்டார்கள்.
இதனால், நேற்று விஜய் தரப்பில் இருந்து ’இனி இதுபோல் வேலைகளை செய்யாதீர்கள், இணையத்தை பயனுள்ளதாக மட்டும் பயன்படுத்துங்கள்’ என்று கூறப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் சில வருடங்களுக்கு முன் அஜித் ரசிகர்களுக்கு கூறிய அட்வைஸ் ஒன்று, நேற்று மறுபடியும் பலர் ஷேர் செய்தனர். இதில் ’மற்ற நடிகர்களை திட்டி, என் ரசிகன் என்று சொல்லி உங்களையும் கேவலப்படுத்தி, என்னையும் அசிங்கப்படுத்தாதீர்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
அவர்களே நண்பர்களாக இருக்க, என்று தான் இவர்கள் திருந்துவார்களோ மேலும் இந்திய அளவில் நிமிடத்தில் ட்ரண்ட் செய்யும் தமிழர்கள் வேறு நல்ல விஷயத்தை ட்ரண்ட் செய்யலாமே? என்று சிலர் கூறி வந்தனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top