↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இராவணன் மிகச் சிறந்த சிவ பக்தன். இராவணன் மேலது நீறு என்று தேவாரத் திருமுறைகள் போற்றும் அளவில் இராவணனின் பெருமை உள்ளது.
எனினும் போர்க்களத்தில் சங்கரன் கொடுத்த வாளை அவன் இழந்து விடுகிறான். சங்கரன் கொடுத்த வாளும்... என்று கம்பன் குறிப்பிட்டுக் கூறுவதற்குள், இராவணனின் அதர்மச் செயலுக்கு சிவசங்கரன் கொடுத்த வாள் உதவி புரியவில்லை என்பது பொருள்.
ஆக, எல்லாம் எல்லா இடத்திலும் சரிவரும் என்று நினைப்பது மடமைத்தனம். அத்தகைய நினைப்பில் இருந்தவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டனர்.
இவை பொதுவான விடயம் என்ற மட்டில் இதனை முடிவுறுத்திக் கொள்ளலாம். நேற்று 13ந் திகதி திருச்சபையின் அருட்தந்தை புனித பாப்பரசர் இலங்கை மண்ணுக்கு வருகை தந்துள்ளார். அவரின் வருகை சமயம் என்ற எல்லை கட ந்து இலங்கை மக்களுக்கு ஆறுதலைத் தந்துள்ளது.
அதிலும் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து, தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்ற கையோடு புனித பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பது; இலங்கையின் எதிர்காலம் சாந்தியும் சமாதானமும் ஏற்படக் கூடியதான சந்தர்ப்பத்தினை அடைந்து வருகிறது என நம்பலாம்.
அதேவேளை புனித பாப்பரசரை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­வின் அழைப்பை ஏற்றே புனித பாப்பரசர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ந் திகதி புனித பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்வதான நாள் நிர்ணயிக்கப்பட்டது.
இது ஒருபுறம் நடந்து கொள்ள, மறுபுறத்தில் 2015ம் ஆண்டு ஜனவரி 8ந் திகதி ஜனாதிபதித் தேர்தல் என்ற அறிவிப்பும் விடப்பட்டது.
தேர்தல் நடக்கின்ற ஜனவரி மாதத்தில் திருத்தந்தை இலங்கைக்கு விஜயம் செய்வதில் சிக்கல்கள் இருக்கும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.
எனினும் ஜனவரி 8ந் திகதி நடக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றி உறுதி என்று நம்பிய மகிந்த ராஜபக்ச­, அந்த வெற்றியோடு எட்டு ஆண்டுகள் தொடர்ந்தும் தான் ஜனாதிபதியாக இருக்கலாம் என்றும் நம்பினார்.
அந்த நம்பிக்கையோடு, ஜனவரி 13ந் திகதி திருத் தந்தையை வரவேற்று; அவரிடம் ஆசி பெறுவதனூடாக பாவமன்னிப்பும் பெற்றுக் கொள்ளலாம் என்று மகிந்த ராஜபக்ச­ நினைத்திருக்கலாம்.
பாவ மன்னிப்புப் பெறுவதற்கும் இறைவனின் அருள் இருத்தல் வேண்டும் என்ற உண்மை இங்கு உறுதிப்படுத்தப்படுகின்றது.
ஆம், புனித பாப்பரசரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­  இப்போது ஜனாதிபதிப் பதவியில் இல்லை. அதே நேரம் திருத்தந்தையின் கரங்களைப் பற்றிப் பிடிப்பதற்கும் மகிந்தவுக்கு பலன் இருக்கவில்லை.
என்ன செய்வது? மைத்திரிபால சிறிசேனவே புனித பாப்பரசரை வரவேற்க வேண்டும்; இலங்கையின் ஆட்சி பீடத்தில் இருக்கக் கூடிய அரசியல்வாதிகளில் மைத்திரிபால சிறிசேனவின் கரங்களே திருத் தந்தையின் கரங்களைப் பற்றிக் கொள்ளட்டும் என்பது நியதியாயிற்று. அந்த நியதி நேற்றைய தினம் நிறைவேறிற்று.
ஆம், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருத்தந்தையின் கரங்களைத் தொட்டு பாவ மன்னிப்புப் பெற்றுக் கொண்டார்.
தமிழ் மக்கள் அளித்த வாக்குகள் மைத்திரியைத் தெரிவு செய்ய, திருத்தந்தை அவரை ஆசீர்வதிக்க, நாட்டில் நல்லாட்சி நடக்கும் எனவும் தமிழர்களின் எதிர்காலம் சுபீட்சமாக அமையும் எனவும் எதிர்பார்க்கலாம்.
எதுவாயினும் இவை எல்லாம் இறை அருளின் செயல் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உணர்ந்து செயற்படும் போதே இந்த நாட்டில் நல்லது மேன்மேலும் விருத்தி பெறும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top