↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad  சிம்பு படங்களின் கதி என்ன?
புத்தாண்டு பிறந்துவிட்டது. பொங்கலும் நெருங்கிவிட்டது. ரசிகர்களுககு விருந்தாக அஜீத், விக்ரம், கார்த்தி, விஷால் படங்கள் என பொங்கல் தினத்தில் திணறடிக்கப்போகிறது என்று டிசம்பர் முதல் கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருந்த பேச்சு அமுங்கிவிட்டது. அஜீத், கார்த்தி படங்கள் தள்ளிப்போய்விட்டது என்ற தகவல்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. விக்ரம் நடிக்கும் ‘ஐ‘, விஷால் நடிக்கும் ‘ஆம்பள என 2 படங்கள் மட்டுமே ரிலீஸ் என்று தற்போது கூறப்படுகிறது.
திடீரென இந்த போட்டி களத்தில் சிம்புவின் இது நம்ம ஆளு படமும் சேர்ந்து கொண்டதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது.

 ஆனால் இந்த படம் இன்னும் முடியவே இல்லை என்றும் அதற்குள் யார் இப்படி வதந்தி பரப்புகிறார்கள் என்றும் பட டைரக்டர் பாண்டிராஜ் குழப்பத்தில் இருக்கிறாராம். படம் எப்போது முடியும் என்பது அவருக்கே புரியாத புதிராக உள்ளதாம். இந்த படத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட சிம்புவின் வாலு படம் கூட தாமதமாகும் என சொல்லப்படுகிறது. கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் தனுஷ் நடித்துள்ள அனேகன், பிப்ரவரியில் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்துடன் சேர்த்து வாலு படத்தை வெளியிட்டால் போட்டி சரியாக இருக்கும் என சிம்புவுக்கு சிலர் யோசனை சொல்கிறார்களாம். ஆனால் இது பற்றி எந்த முடிவும் அவர் எடுக்கவில்லையாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top