↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சுவிஸின் ரோஜர் பெடரர் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடந்த சர்வதேச டென்னிஸின் இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் 1,000 ஆட்டங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
சுவிஸை சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் விளையாட்டு வீரர், பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸில் விளையாடி வந்துள்ளார்.
உலக அளவில் டென்னிஸில் 2ம் இடத்தில் உள்ள பெடரர் இந்த தொடரின் இறுதி போட்டியில் கனடா நாட்டைச் சேர்ந்த வீரரை 6-4, 6-7, 2-7, மற்றும் 6-4 என்ற நிலையில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் அவரது டென்னிஸ் வாழ்வில் இதுவரை அவர் 83வது பட்டத்தை வென்றுள்ளார்.
மேலும் இந்த வெற்றியின் மூலம் 1000 வெற்றிகளை பெற்றவர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி பேசிய பெடரர், நான் பல ஆண்டுகளாக நிறைய டென்னிஸ் விளையாடியுள்ளேன். இந்த 1000 வெற்றி எனக்கு நிறைய பொருள் தரும் வெற்றியாகும்.
இது என் வாழ்வின் சிறப்பான கணம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் இந்த போட்டியை நான் எப்போதும் மறக்கமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top