↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அருண் விஜய் கடைசியாக நடித்த படம், டீல். டீல் ஆங்கிலம் என்பதால் வரிச்சலுகைக்காக வா என்று படத்தின் பெயரை மாற்றினர். கோ படத்தில் அறிமுகமான கார்த்திகா அப்படத்துக்குப் பிறகு வா படத்தில் அருண் விஜய் ஜோ‌டியாக நடித்தார்.

























அருண் விஜய்யின் மனைவியின் குடும்பத்தார்தான் படத்தை தயாரித்தது. குடும்பப் பிரச்சனையா பணப்பிரச்சனையா தெரியவில்லை, படம் இன்னும் வெளியாகாமலே உள்ளது. வேறு படங்கள் இல்லாத நிலையில் கௌதம் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டார் அருண் விஜய்.
 
வில்லன் என்றாலும் பவர்ஃபுல் கதாபாத்திரம். உடம்பை இரும்பாக்கி எய்ட்பேக் வைத்து தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். என்னை அறிந்தால் வெளிவந்தால் அருண் விஜய்க்கும் நல்ல பெயர் கிடைக்கும். அதனால் என்னை அறிந்தால் வெளிவந்த பிறகு வா படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top