கடந்த 3ம் திகதி நள்ளிரவு தல அஜித்தின் "என்னை அறிந்தால்" டீசர் வெளியாகியது. இதைமுன்னிட்டு டுவீட்டரில் ரெண்டிங்கை ஏற்படுத்துவதற்காக 3ம் திகதி மாலையிலிருந்து #YennaiArindhaalTeaserStormOnDec4 என்ற டாக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள் கருத்துக்களை டுவீட்டரில் பதிவேற்றிக்கொண்டிருந்தமை எல்லோருக்கும் தெரிந்ததே!!
அதுபோக கிட்டத்தட்ட 10 மணித்தியாலங்கள் வரை இந்திய ரெண்ட் வரிசையில் முதலிடத்தில் இருந்தமையும் அறிந்ததே!! அதுபோக கடந்த 5ம் திகதி(டீசர் வந்த அடுத்த தினம்) விஜய் திரைக்கு வந்து 22 ஆவது ஆண்டு தினத்தை பிரதிபலித்து விஜய் ரசிகர்கள் ஒரு டாக்கை உருவாக்கி அசுரத்தனம் புரிந்தபோதும் #YennaiArindhaalTeaserStormOnDec4 டாக்கை முந்தமுடியவில்லை. அதுபோக விஜயின் 22ம் ஆண்டு தினமும் என்னை அறிந்தால் டீசரால் சமுக வலைத்தளங்களில் ஸ்தம்பிதமடைந்தமை பார்க்கக்கூடியதா இருந்தது.
ஆனால், பெரும் ஆச்சரியம் என்னவெனில் இன்றுவரை, அதாவது இந்த செய்தி வெளியிடும்வரையும் #YennaiArindhaalTeaserStormOnDec4 என்ற டாக் இந்திய அளவில் முதல் 10 இடத்தில் இருக்கின்றது. இப்பிடியொரு ரசிகர்களில் வெறித்தனத்தை டுவீட்டரில் இதுவரை பார்க்கவே இல்லை என்று வியக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment