பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே தான் நடித்திருந்த நஷா என்ற பாலிவுட் படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தார். படுபயங்கர கவர்ச்சி காட்சிகளுடன் வெளிவந்த இந்த படம் சரியாக ஓடவில்லை. எனவே அப்செட்டில் இருந்த பூனம், என்ன செய்யலாம் என்று ரூம்போட்டு யோசித்ததன் விளைவுதான் நேற்று டுவிட்டரில் வந்த குளியலறை புகைப்படங்கள்.
இந்த புகைப்படங்கள் வெளியான 24 மணிநேரத்தில் அவரை அதிர்ஷ்டம் தேடிவந்துள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த கன்னட தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட வருமாறும், அதற்காக ரூ.5 கோடி சம்பளம் தரத்தயார் என்றும் அழைப்பு விடுத்திருக்கின்றார்.
இதை கேட்டு இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப்போனார் பூனம். தயாரிப்பாளரின் ஒரே கண்டிஷன் குத்தாட்டம் முழுவதும் குளியறையில்தான் எடுக்கப்படும் என்பதுதான். ஒரு படம் முழுவதுக்கும் ஒரு வருடம் கால்ஷீட் கொடுத்து நடித்தால்கூட இவ்வளவு பணம் கிடைக்காது. ஒரு வாரம் மட்டும் படப்பிடிப்பு நடைபெறும் குத்தாட்டத்திற்கு ரூ.5 கோடியா? என்று வாயைப் பிளக்கிறார்கள் சக நடிகைகள். இதன் காரணமாக சில நடிகைகள் தாங்களும் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தை வேறுவிதமாக பயன்படுத்த முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
0 comments:
Post a Comment