ளைய தளபதி விஜய் திரையுலகிற்கு வந்து நேற்றொடு 22ஆண்டுகள் முடிந்துள்ளது. இந்த நெடுந்துர வெற்றி பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தனது ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் அனைவரும் நன்றி தெரிவித்துள்ளார் விஜய்.
இதுகுறித்து விஜய் நீண்ட அறிக்கை ஒன்றையை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு முதலில் நன்றி கூறியுள்ளார். தன்னை நாயகனாக வைத்து ஆரம்பத்தில் படம் தயாரித்த பிவி கம்பைன்ஸ் பி விமல், ஸ்ரீமாசானியம்மன் மூவீஸ் சவுந்தரபாண்டியன், ஆஸ்கார் மூவிஸ் நேஷனல் எம் பாஸ்கர், பாலாஜி பிரபு, ஸ்ரீசாய்ராம் மூவீஸ் ஸ்ரீதேவி, ஸ்ரீவிஜயலட்சுமி மூவிலேண்ட், எம்எஸ்வி முரளி, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி, குமார் மூவீஸ் எம்மார், செவன்ந்த் சேனல் நாராயணன், பவித்திரன், எம்ஜி பிக்சர்ஸ் சேகர், சந்தானம், ஏஎம் ரத்னம், கே ஆர்ஜி, மோகன் நடராஜன், கலைப்புலி தாணு, அய்ங்கரன் கருணாமூர்த்தி, சந்திரபிரகாஷ் ஜெயின் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதே போல தன்னை இயக்கிய, விக்ரமன், செல்வபாரதி, பாசில், கேஎஸ் ரவிக்குமார், ஷங்கர், ஏ ஆர் முருகதாஸ் உள்ளிட்ட அனைத்து இயக்குநர்களுக்கும், உடன் நடித்த சக கலைஞர்களுக்கும், 24 யூனியன்களைச் சேர்ந்த டெக்னீஷியன்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். உரிய நேரத்தில் சரியான விமர்சனங்கள் தந்து, நிறை குறைகளைக் கூறி இந்த உயரத்துக்கு தான் வர உதவிய மீடியா நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கடைசியாக, அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்த வாசகங்கள்தான் ரசிகர்களை ஆனந்தக்கண்ணீர் விட வைத்திருக்கிறது. அதில்… ‘‘இத்தனை வருடங்களாக என்னோட இணைந்திருக்கும் ரசிகர்களாகிய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே எனக்கு சத்தியமாகத் தெரியவில்லை. வெற்றி, தோல்வி என்று பார்க்காமல் எப்போதுமே நீங்கள் என்னுடன் இருந்து வருகிறீர்கள். நீங்கள் எனக்காக செய்துகொண்டிருப்பதற்கு நிகராக நான் நன்றி தெரிவிக்கும் அளவுக்கு ஒரு வார்த்தை இந்த உலகத்தில் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. இன்றைக்கு நான் அடைந்திருக்கும் இந்த வளர்ச்சிக்கு நீங்கள் என்மேல் காட்டிய அன்புதான் காரணம். எப்போதும் நான் சொல்வதுபோல, என் நெஞ்சில் குடியிருப்பது நீங்கள்தான்!’’ என நெகழ்ச்சியாக குறிப்பிட்டிருக்கிறார்.
விஜய்யின் இந்த அறிக்கை வெளிவந்தபிறகு பல ரசிகர்களும் அவரைப் பாராட்டியும், புகழ்ந்தும், அவரை நினைத்து பெருமைப்பட்டும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இரவிலிருந்து இப்போது வரை #VIJAY_22YearsOfGloriousJourney என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் இந்திய அளவில் டிரென்டில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.