சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பெயரிடப்படாத படத்தின் முதல் ஷெட்யூல்ட் முடிந்தது. பாடல் காட்சி ஒன்றையும், சண்டைக் காட்சி ஒன்றையும் முதல் ஷெட்யூல்டில் படமாக்கியுள்ளனர்.
விஜய், ஹன்சிகா, ஸ்ருதி, ஸ்ரீதேவி, சுதீப் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில வாரங்கள் முன்பு சென்னை இசிஆரில் தொடங்கியது. பிரமாண்டமான அரண்மனை அரங்கில் முதலில் பாடல் காட்சியை படமாக்கினர்.
விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி மற்றும் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். அடுத்து ஆக்ஷன் காட்சி ஒன்றும் படமானது.
சென்னை ஷெட்யூல்ட் முடிந்த பின் படயூனிட் கேரளா செல்லவுள்ளது. இபடத்தில் ஸ்ரீதேவி ராணியாகவும், ஹன்சிகா இளவரசியாகவும், சுதீப் ஸ்ரீதேவியின் படைத்தளபதியாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment