எனவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான உணவுகளை கொடுக்க வேண்டும்.
மேலும் மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு எந்த ஒரு காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட கொடுக்கும் முன்னும், வினிகர் கலந்த நீரில் அவற்றை கழுவி, பின் சாப்பிடக் கொடுப்பது நல்லது.
முட்டை
முட்டையில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு இதனை மழைக்காலத்தில் தவறாமல் தினமும் ஒன்று சாப்பிட கொடுக்க வேண்டும்.
இதனால் குழந்தைகளுக்கு புரோட்டீன்கள் மட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துக்ள் போன்றவையும் கிடைத்து, மழைக்காலத்தில் சளி, இருமல் போன்றவை தொற்றிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
பாதாம்
குழந்தைகளின் பார்வையை கூர்மையாக்கவும், அழகான சருமம் மற்றும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பெறவும், தினமும் பாதாமை நீரில் ஊற வைத்து தோலுரித்துக் கொடுத்து சாப்பிட வையுங்கள்.
இல்லாவிட்டால், பாதாமை அரைத்து அதனை பாலுடன் சேர்த்தும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
சூப்
மழைக்காலத்தில் சூப் குடித்தால் இதமாக இருக்கும். அதிலும் இதனை தினமும் குடித்து வந்தால், அவை உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமின்றி, சூப்பில் சேர்க்கப்படும் காய்கறிகளால் உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
குங்குமப்பூ பால்
மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு குங்குமப்பூ பாலைக் கொடுத்து வந்தால், அதில் உள்ள கெமிக்கல்கள் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
பூண்டு
குழந்தைகளுக்கு பூண்டு என்றாலே பிடிக்காது. இருப்பினும் பூண்டில் நிறைய சத்துக்கள் நிறைந்திருப்பதால், அதனை அரைத்து பேஸ்ட் செய்து சமைக்கும் உணவில் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால், பூண்டின் சத்துக்களானது குழந்தைகளுக்கு கிடைக்கும்.
பருப்பு வகைகள்
உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சிக்கும், பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கவும் புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது.
அதிலும் மழைக்காலத்தில் நோய்களின் தாக்கத்தினால் உடலில் உள்ள செல்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், அப்போது பருப்பு வகைகளை உணவில் சேர்த்து வந்தால், செல்களானது புதுப்பிக்கப்படும்.
0 comments:
Post a Comment