பத்திரிக்கை அட்டைப் படங்களுக்கு மட்டும் உடம்பை காட்டலாமா என்று தீபிகாவிடம் அவரது கிளீவேஜ் செய்தியை வெளியிட்ட நாளிதழ் கேட்டுள்ளது. நடிகை தீபிகா படுகோனே பிரபல ஆங்கில நாளிதழ் தனது கிளீவேஜை போட்டோ எடுத்து செய்தி வெளியிட்டது குறித்து ட்விட்டரில் அதை விளாசியிருந்தார்.
இதை பார்த்த நாளிதழ் முதலில் தனது இணையதளத்தில் தீபிகாவுக்கு நறுக்கென்று பதில் அளித்தது. இந்நிலையில் அவரது ஃபேஸ்புக் கருத்தை பார்த்து மீண்டும் அந்த நாளிதழ் பதில் அளித்துள்ளது. டியர் தீபிகா, எங்களின் கருத்து என்று தலைப்பிடப்பட்ட அந்த கட்டுரையில் கூறியிருப்பதாவது,
படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தலை முதல் கால் வரை ஆடை அணியவும், நிர்வாணமாகவும் நடிக்க வேண்டி இருக்கும். அந்த கதாபாத்திரத்தை ஏற்பது நடிகையின் விருப்பம். இது ரோல், ரியல் அல்ல என்று தீபிகா கடந்த வெள்ளிக்கிழமை ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார். உங்களின் ரோல் மற்றும் ரியல் வாக்குவாதத்தை ஏற்றுக் கொள்கிறோம். மேடைகளில் ஆடும்போது, பத்திரிக்கையின் அட்டப்படத்திற்கு, போட்டோஷூட்டுக்கு உடம்பை காட்டி போஸ் கொடுத்தபோது இந்த ரீல் ரியல் எங்கு சென்றது. அதில் உங்களின் ரோல் என்ன? ஏன் இந்த போலித்தனம்?
பல மீடியா நிறுவனங்கள் தீபிகாவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு அவரது கிளீவேஜ் செய்தியை வெளியிட்டதும் போலித்தனம் தான். தலைப்பை மாற்றி வைத்திருந்திருக்கலாம். ஆனால் ஆன்லைன் உலகம் செய்தித்தாள்களில் இருந்து மிகவும் வேறுபட்டது. பரபரப்பான தலைப்பு கொடுப்பது சகஜம். தீபிகா பொது நிகழ்ச்சிக்கு வருகையில் எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிட அவரிடம் அனுமதி வாங்க வேண்டுமோ? அவை ஒன்றும் மறைத்து வைக்கப்பட்ட கேமராவில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் இல்லை. அவருக்கு தெரியாமல் எடுக்கப்பட்டவையும் இல்லை.
ஒரு மது நிறுவனத்தின் காலண்டர் கேர்ளாக வாழ்க்கையை துவங்கிய தீபிகா, நடிகர்களின் 8 பேக்ஸை பார்த்து ஜொள் விடுகிறோம் ஆனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கையில் அவரின் மர்ம உறுப்பையா ஜூம் செய்கிறார்கள் என்று எழுதியுள்ளார். தீபிகா, நாங்கள் பெண்ணின் மர்ம உறுப்பையோ அல்லது நிப்பிளையோ ஜூம் செய்யவிலல்லை என பதிலடி கொடுத்துள்ளனர்..
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.