தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னர்களில் ஒருவர் இளைய தளபதி விஜய். கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி விஜய் இன்றோடு திரையுலகில் காலடி எடுத்து வைத்து 22 வருடங்கள் ஆகிவிட்டது. அதுப்பற்றிய சிறப்பு தொகுப்பு தான் இந்த பகுதி.
புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சி அவர்களின் மகனான விஜய் அவர் இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக தலை காட்டினார். பின்பு சினிமா வெறி அவரது இரத்தத்திலேயே இருந்த காரணத்தால் என்னமோ தன் அப்பாவிடம் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் நடித்த அண்ணாமலை படத்தின் வசனத்தை பேசி காட்டி, சினிமாவில் நடிக்க அனுமதி வாங்கினார்.தமிழ் சினிமாவின் நாளைய தீர்ப்பை அன்றே எழுதினார்.
அதை தொடர்ந்து தன் அப்பாவின் கைப்பிடியில் பல படங்கள் நடித்தாலும் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படம் தான் விஜய்யின் கேரியரில் ஒரு மைல் கல்லான படம். அதை தொடர்ந்து அவருக்கு பல குடும்ப பாங்கான ரசிகர்கள் வர தொடங்கினார்.இந்த பேமிலி ஆடியன்ஸ் இமேஜை பயன் படுத்தி காதலுக்கு மரியாதை, லவ் டுடே, நினைத்தேன் வந்தாய் என பல படங்களில் நடித்து வெற்றி பெற்றார்.
இதன் பிறகு இவர் நடித்த பல படங்கள் தோல்வியிலேயே முடிய குஷி படம் தான் மீண்டும் விஜய்யின் கேரியர் கிராபை உயர்த்தியது. இதை சமீபத்தில் ஒரு மேடையில் அவரே கூறியிருந்தார்.அதன் பிறகு பத்ரி, பிரியமானவளே, யூத் என அனைத்தும் ஹிட் அடிக்க, திருமலையில் ஆக்ஷன் அவதாரம் எடுத்தார். இதுநாள் வரை அனைவரும் சாப்ட்டான விஜய்யை பார்த்த வந்த நிலையில் கில்லி. மதுர, திருப்பாச்ச்சி, சிவகாசி, போக்கிரி என திரையில் அதிரடி வேட்டை நடத்தியது மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் அறுவடை வேட்டை நடத்தினார்.
இறுதியா இவர் நடித்த துப்பாக்கி திரைப்படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூல் சாம்ராஜ்ஜியம் நடத்தியது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த கத்தி திரைப்படமும் மக்கள் மனதை ரெம்பவே கவர்ந்த திரைப்படமாகும். தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தில் இருப்பது இளைய தளபதி மற்றும் இவரது சகபோட்டியாளர் அஜித் ஆவார்கள். இவரின் வெற்றி வேட்டை இன்று போல் என்றும் நிலைக்க வாழ்த்துக்கள்.
............................................................................................................
எமது தளத்தின் செய்திகள் உங்களுக்கு பிடித்திருப்பின், இதே போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment