↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தமிழ் சினிமாவின் மோஷ்ட் ஸ்டையிலிஷ் இயக்குனர் என்றால் அவர் கண்டிப்பாக விஷ்ணுவர்தனாக தான் இருக்க வேண்டும். அந்த அளவிற்கு தன் படங்களில் ஹாலிவுட் பாணியில் காட்சிகளை அமைத்து சபாஷ் வாங்க கூடியவர்.

இயக்குனர்களுக்கு கும்பகோணம் என்றாலே ஸ்பெஷல் தான், இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மட்டுமில்லாமல் ஸ்டையிலிஸ் இயக்குனர் விஷ்ணுவர்தனும் இதே ஊரில் பிறந்தவர் தான். சிறு வயதிலேயே கிளாஸ் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் நடித்தவர்.அதனால் என்னமோ அவருக்கு இயக்குனர் மோகம் தொற்றிக்கொண்டது.

 இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்+இயக்குனர் சந்தோஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தார். பின் தெலுங்கு டப்பிங் படம் ஒன்றை தமிழில் குறும்பு என்ற பெயரில் இயக்கினார். இப்படம் சரியாக போகவில்லை என்றாலும் யுவனின் பாடல்கள் மிகவும் கைகொடுத்தது.இப்படத்தில் தான் முதன் முதலாக ரீமேக்ஸ் கலாச்சாரம் வந்தது. இதை தொடர்ந்து அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்களை இயக்கினாலும் தல உடன் இவர் இணைந்த பில்லா தான் இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இப்படம் இந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸிலேயே ஒரு புரட்சியை உண்டாக்கியது.

இதை தொடர்ந்து இவர் இயக்கிய சர்வம் சரியாக போகவில்லை என்றாலும் உடனே தல மீண்டும் ஒரு நல்ல ஆரம்பத்தை தொடர்ங்கி வைத்தார் ஆரம்பம் படத்தின் மூலம். தற்போது மீண்டும் ஹிட் இயக்குனர் ஆன இவர் யட்சன் படத்தை இயக்கிவருகிறார்.திரைத்துறையில் அவர் இது போல பல வெற்றி படிக்கட்டுகளை கடக்கவேண்டும். ஸ்டையிலிஷ் இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு சினி உலகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top