↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கோலிவுட் நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி,விஷாலின் படங்கள் மற்ற மொழிகளில் டப்பிங்செய்யப்பட்டு ஹிட் கலெக்ஷன் கொடுத்திருக்கிறது.கேரளாவில் நேரடி படமாகவே ரிலீஸ் செய்துகலெக்ஷன் பார்க்கிறார்கள்.

இதைப்பார்த்த சில கோலிவுட் நடிகர்கள் டோலிவுட்சென்றால் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எண்ணிநேரடியாக அம்மொழியில் நடிக்கச் சென்று தாக்குபிடிக்க முடியாமல் திரும்பி கோலிவுட்டுக்கேவந்துவிட்டார்கள். ஆர்யா, ஸ்ரீகாந்த், ஷாம்போன்றவர்கள் இப்படி சூடுபட்டிருக்கிறார்கள். சூர்யா,விஷால். கார்த்தி படங்கள் தற்போது டோலிவுட்டில்ஃபுல்லா கல்லா கட்டிக்கொண்டிருக்கிறது.

 இதை கணக்குபோட்டு பார்த்த மூவரும் நேரடிதெலுங்கு படங்களில் களமிறங்க முடிவுசெய்திருக்கின்றனர். முதல்பிரவேசமாக கார்த்தி, நாகார்ஜுனாவுடன் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இதையடுத்துசூர்யா களத்தில் குதிக்க முடிவு செய்திருக்கிறார். ஆனால் இந்த பிரவேசம் அதிரடியாக இருக்க வேண்டும் என்பதில்தெளிவாக இருக்கிறார்.

இதற்காக மாஸ்டர் பிளான் வகுத்திருக்கிறாராம். டோலிவுட் பிரபல இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படம் மூலம்அவர் என்ட்ரி கொடுப்பதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வருகிறது என்கிறது சூர்யா தரப்பு. தொடர்ந்து தனதுபடங்களை தானே தயாரிக்கும் சூர்யா, தெலுங்கு பட தயாரிப்பு, வினியோக பணியிலும் ஈடுபட முடிவு செய்துள்ளாராம்.
............................................................................................................
எமது தளத்தின் செய்திகள் உங்களுக்கு பிடித்திருப்பின், இதே போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top