↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
எத்தனையோ பிரச்சினைகள் சுற்றிச் சுழன்றடித்தாலும், அசராமல் அடுத்த அடியை எடுத்து வைத்தபடி உள்ளனர் கத்தி தயாரிப்பாளர்கள். இந்தப் படத்தை எந்த அரங்கிலும் வெளியிட விட மாட்டோம் என்று பல அமைப்புகள் முழங்கியபடி இருக்க, சத்தமின்றி படத்தை பெரும் விலைக்கு அனைத்து ஏரியாக்களிலும் விற்றுவிட்டனர் லைகா நிறுவனத்தினரும் அய்ங்கரன் நிறுவனத்தினரும். தமிழகத்தின அனைத்து ஏரியாவிலும் உள்ள திரையரங்குகள் எம்ஜி எனும் மினிமம் கியாரண்டி முறையில் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகின்றனர். படத்தின் கேரள உரிமையை தமீம் பெற்றுள்ளார். தெலுங்கு உரிமை தாகூர் மதுவுக்குக் கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் கோல்டி பிலிம்ஸ் கத்தியின் உரிமை பெற்றுள்ளது.
கனடாவில் 20 அரங்குகள், மலேசியாவில் 120 அரங்குகள், இங்கிலாந்தில் 70 அரங்குகள் என பிரமிக்க வைக்கும் எண்ணிக்கையில் சர்வதேச அரங்குகளில் வெளியாகிறது கத்தி. வளைகுடா நாடுகள், இலங்கை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என தமிழர் அதிகம் வாழும் நாடுகளில் மேலும் அதிக அரங்குகளில் வெளியாகிறது கத்தி.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment