'உடம்பை அட்டகாசமா வெச்சிருக்கீங்க' என்று படப்பிடிப்பு தளத்தில் அருண்விஜய்யை வெகுவாக பாராட்டி இருக்கிறார் அஜித்.
அஜித், அனுஷ்கா, விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் கெளதம் மேனன். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை தயாரித்து வருகிறார் ஏ.எம்.ரத்னம்.
இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பு தளத்தில் அருண்விஜய்யை வெகுவாக பாராட்டி இருக்கிறார் அஜித்.
இப்படத்திற்காக ஜிம்மிற்கு சென்று வெகுவாக உடலமைப்பை மாற்றியிருக்கிறார் அருண் விஜய். "உடம்பை அட்டகாசமா வெச்சிருக்கீங்க... தினமும் ஜிம்முக்குப் போகணும்னு உங்களைப் பார்க்கிறப்பலாம் தோணுது. யூ ஆர் மை மோட்டிவேஷன்" என்று அருண்விஜய்யிடம் தெரிவித்திருக்கிறார் அஜித்.
திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் 28-வது வயசுல ஆரம்பிச்சு, 38-வது வயசு வரைக்குமான 10 வருடப் பயணம்தான் படம் என்று படத்தின் கதைக்கருவைத் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.
இப்படத்தின் இசையினை நவம்பர் மாத இறுதியில் வெளியிடவும், அதனைத் தொடர்ந்து படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறை அல்லது பொங்கலுக்கு வெளியிடலாம் என்றும் தீர்மானித்து இருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment