↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வான மலாலாவை பாராட்ட அவரது பெயரை மசாலா என்று ட்விட்டரில் தெரிவித்த நடிகர் ஜாக்கி பாக்னானி பலரின் கேலிக்கு ஆளாகியுள்ளார். 2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பாகிஸ்தானிய சிறுமி மலாலா யூசப்சாய்க்கு கிடைத்துள்ளது. இது குறித்து அறிந்த பாலிவுட் நடிகர் ஜாக்கி பாக்னானி மலாலாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறி அனைவரின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். காரணம் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மலாலாவின் பெயரை தவறாக எழுதியது தான்.
மசாலா மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பற்றிய நல்ல செய்தியை கேட்டேன். என் யங்கிஸ்தான் படத்தில் வரும் உரை அவரை மனதில் வைத்து எழுதப்பட்டது என்று பாக்னானி ட்விட்டரில் தெரிவித்தார். மலாலாவை மசாலா என்று ட்வீட் செய்த பாக்னானியை மக்கள் கிண்டலடிக்க ஆரம்பித்தனர்.
மக்கள் கிண்டல் செய்த பிறகு அவர் அந்த மசாலா ட்வீட்டை அழித்துவிட்டார். சாரி மலாலா டைப் செய்யும்போது தவறாகிவிட்டது என்று பாக்னானி மறுபடியும் ட்வீட் செய்தார். அது டைப் செய்யும்போது ஏற்பட்ட தவறு. ஆனால் அதனால் நீங்கள் அனைவரும் சந்தோஷமாக சிரித்தீர்கள் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என பாக்னானிட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மலாலாவுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மாடல் நவோமி காம்பெல் அவரின் பெயரை மலேரியா என்று தவறாக குறிப்பிட்டு பின்னர் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment