விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள கத்தி படம் தீபாவளிக்கு பிரம்மாண்டமாக ரிலீஸாகவிருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து சிம்பு தேவன் இயக்கத்தில் மாரீசன் என்ற வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் வாரம் தொடங்கவிருந்தது. ஆனால் விஜய் கத்தி படம் வெளியான பிறகு நிதானமாக மாரீசன் படப்பிடிப்பு தொடங்கினால் போதும் என்று சொல்லிவிட்டாராம்.
விஜய் இப்படி சொன்னது சிம்புதேவன் மற்றும் அவரது யூனிட்டுக்கு பெரும் மனநிம்மதியை தந்துள்ளதாம். ஏனென்றால்… சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் கிழக்குக்கடற்கரைசாலையில்
கோவளம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சுமார் 100 எக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் அரண்மனை மற்றும் தர்பார் செட்டை பிரமாண்டமாக அமைத்து வருகிறார் கலை இயக்குநர் முத்துராஜ். வேலையில் சற்று தாமதம் ஏற்பட்டதால் சொன்ன தேதியில் வேலைகள் முடியவில்லையாம்.
0 comments:
Post a Comment