↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய் படம் என்றால் அதில் சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த அதிரடி படமாகதான் இருக்கும். தற்போது அஜித்தும் விஜய்யின் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்.

முரட்டுக்காளை ஸ்டைலில் அண்ணன் தம்பிகள் பாசத்தை வீரம் படத்தில் பங்கு வைத்தார், இயக்குநர் சிவா. இப்போது பாசமலர் ரேஞ்சுக்கு அண்ணன் தங்கை கதையை கையில் எடுத்து இருக்கிறார்.

நாயகி வேஷத்துக்காக நீ நான் என போட்டி போடும் நாயகிகள் மத்தியில், தங்கை கேரக்டருக்கு யாரும் முன்வரவில்லை. போட்டிகளுக்கு இடையில் ஸ்மைல் காட்டி ஸ்ருதிஹாசன் ஹீரோயின் சான்ஸை தட்டிச்சென்றார்.

இந்தப்பட வாய்ப்புக்காக தான் ஸ்ருதி, கார்த்தியின் ஜோடியாக நடிக்கவிருந்த படத்திலிருந்து கழன்று கொண்டார். என்ன யோசித்தாலும் இன்னமும் தங்கை கேரக்டருக்கு ஆள் கிடைக்காமல் அலைகிறது, சிவா படக்குழு.

இந்த படத்தில் அஜித்தின் பின்புலம் முழுக்க முழுக்க கொல்கத்தாவில் நடக்கிறது. எனவே சிவா, மம்தாபேனர்ஜியின் மண்ணுக்கு படை எடுத்திருக்கிறார். விரைவில் ஸ்ருதிஹாசனுடன் கொல்கத்தா போகவிருக்கிறாராம், தல ப்ளஸ் சிவா யூனிட்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top