↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் அறிமுகமான கவுதம் கார்த்திக் நடித்த ஐஸ்வர்யா தனுஷின் 'வை ராஜா வை' திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தின் வெற்றியை கவுதம் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் அவர் தற்போது 'இந்திரஜித்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக சமீபத்தில் ஒரு மிக வேகமான பாடல் ஒன்றுக்கு ஷோபி மாஸ்டரின் நடன பயிற்சியில் ஆடியுள்ளார்.

இந்நிலையில் வாகை சூட வா' படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் சற்குணம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர் இயக்கி வரும் 'சண்டிவீரன்' படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இயக்குனர் பாலா தயாரித்து வரும் சண்டிவீரன் படத்தில் அதர்வா, கயல் ஆனந்தி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை அடுத்து சற்குணம், கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. கவுதம் கார்த்திக் ஏற்கனவே சிப்பாய், ரங்கூன் ஆகிய படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top