↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படம் ‘புலி’. இப்படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர்.மேலும், ஸ்ரீதேவி கபூர், கன்னட நடிகர் சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்திற்கு நட்டி என்ற நடராஜ் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதில் பிரம்மாண்டமாக செட் அமைத்து பாடல் காட்சிகளை படமாக்கினார்கள். பின்னர் சென்னையில் பட காட்சிகளை படமாக்கினர். தற்போது படப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்த கட்டமாக ஆந்திரா செல்லவுள்ளனர். ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் பத்து நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். அடுத்த கட்டமாக மீண்டும் சென்னையில் படமாக்கவுள்ளனர். அதன்பின் கேரளாவிற்கு செல்லவுள்ளனர். மேலும் பஞ்சாப்பில் முக்கியமான காட்சிகளை படமாக்கவுள்ளனர். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top