↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கமல் நடித்திருக்கும் பாபநாசம் படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக ஆஷா சரத் நடித்துள்ளார். 

மலையாள த்ரிஷ்யத்திலும் அவர்தான் குறிப்பிட்ட வேடத்தை செய்திருந்தார். தமிழில் அவர் மலையாளம் பேசும் ஐபிஎஸ் அதிகாரியாக வருகிறார்.
 
கமலுடன் நடித்த அனுபவத்தை ஆஷா சரத் பகிர்ந்து கொண்டார்.
 
கமலுடன் நடிக்கக் கிடைத்த சந்தர்ப்பம் மறக்க முடியாதது என்றவர், அவரது அப்ரோச்சே வித்தியாசமாக இருந்தது என்றார். இது கமல்ஹாசன்தானே என்று பலநேரம் சந்தேகமாக இருந்தது.
 
அவர் செட்டில் எங்களுக்கெல்லாம் காபி எடுத்துத் தருவார். ஜோ‌க் சொல்வார். பெரும்பாலும் என்னிடம் மலையாளத்திலேயே பேசினார் என்று ஆஷா சரத் தனது ஆச்சரியத்தை பகிர்ந்து கொண்டார்.
 
ஆஷா நடிகை மட்டுமின்றி நல்ல டான்சர். அதனால் நடனம் குறித்தும் கமல் அவரிடம் நிறைய பகிர்ந்து கொண்டிருக்கிறார். உங்க தமிழ் நன்றாக இருக்கிறது, நீங்களே டப்பிங் பேசுங்கள் என்று கமல் சொன்னதை கௌரவமாக நினைப்பதாகவும் ஆஷா குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top