↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விக்ரமுக்கு இருக்கும் ரசிகர்களை விட அஜித்க்கு பன்மடங்கு ரசிகர்கள் அதிகம் என்று சொல்லவே தேவை இல்லை, அனைவரும் அறிந்த ஒன்று தான். ஷங்கர் என்ற ஒரு பிரமாண்டம் விக்ரமுடன் கைகோர்த்ததால் அஜித் மற்றும் விக்ரம் படங்களுக்கு சமமான எதிர்பார்ப்பொன்று ஏற்பட்டுவிட்டது. விக்ரம், எமிஜாக்ஸன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள ஐ படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று செய்திகள் வெளிவந்தது.

அதே போல் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். முதலில் ஜனவரி 8ஆம் தேதியில் வெளியாகும் என்று தகவல் வெளியானது பிறகு ஐ படம் 14ம் தேதியிலிருந்து 8ம் தேதி மாற்றியதை அடுத்து அஜித்தின் என்னை அறிந்தால் 8ம் தேதியிலிருந்து 14ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.


தயாரிப்பாளர்கள், படக்குழுவினர்களுக்கு இடையேயான உடன்பாட்டையடுத்து "ஐ" படத்தின் பட்ஜெட்டை கருத்திற்கொண்டு அதற்கு முக்கியத்துவம் அளித்து 8ம் தேதி வெளியிடவும், அஜித் படம் 14ம் தேதி வெளியிடவும் முடிவெடுத்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இதுபற்றிய உறுதியான தகவல்கள் அடுத்துவரும் வாரங்களில் அறிந்துகொள்ளலாம் என நம்பப்படுகிறது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top