↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜித்தின் "அசல்" படத்திற்குபிறகு அஜித் படங்கள் எதற்குமே "ஆடியோ வெளியீடு" விழாவாக கொண்டாடப்படுவதில்லை. நேரடியாகவே ரேடியோ நிலையங்கள், ஆன்லைனுக்கு பாடல்களை அனுப்புவார்கள். அதே நிலைதான் இம்முறையும், எந்தவொரு விழாவும் இல்லை. 

ஆனா, சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களின் அடிப்படையில் அஜித் ரசிகர்கள் தாமாகவே ஒரு விழாவை ஒழுங்குபடுத்தப்போகிறார்கள் என்ற செய்தி கசிந்துள்ளது. ஆம், "கோவை மாவட்ட அஜித் தலைமை செயலகம் ரசிகர்கள் நற்பணிமன்றம்" சார்பாக இந்த விழாவை கோவை அர்ச்சனா தியேட்டரில் எதிர்வரும் 18 ம் திகதி காலை 11 மணிக்கு சிறப்புடன் செய்யவிருக்கிறார்கள். இதற்காக அஜித் ரசிகர்கள் அனைவரையும் வருமாறு விழா ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top