அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டால் இளம் வயதில் பார்வை இழக்கும் அபாயமும் ஏற்படும். அதனால் உடலின் முக்கியமாக பகுதியாக திகழும் கண்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.
சிறிய விடயம் கூட கண்ணில் ஏற்படுத்தும் தாக்கத்தை அறியச் செய்யும். தையல் இயந்திரத்தில் தைக்கும்போது, ஊசியில் நூலை கோர்ப்பதற்கு முழு கவனத்துடன் அந்த ஊசியில் உள்ள ஓட்டையை உற்று பார்க்க வேண்டியுள்ளது. இது கண்களுக்கு மிகுந்த அழுத்தம் தரும். இதனால் கண்களில் வலி ஏற்படும்.
அதே போல் படுத்துக்கொண்டு படிக்கக்கூடாது. ஏனெனில் படுத்துக்கொண்டு படிப்பதால், கண்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கண்களில் சில சமயங்களில் வலி கூட ஏற்படும்.
பயணத்தின் போது படித்தால் கண்கள் மிகவும் பாதிக்கப்படும். அந்த நேரம் நம் பார்வை ஒரே சீரான நிலையில் இருக்காது, ஒருவித அசைவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அப்போது கண்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும்.
வெளியே அதிகமான சூரிய வெளிச்சம் இருக்கும்போது, சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள், கண்களை பாதிப்பதோடு, வறட்சியை ஏற்படுத்தி, பார்வை கோளாறை உண்டாக்கும். ஆகவே வெளியே வெயிலில் செல்லும்போது கண்ணுக்கு கண்ணாடி அணிந்து செல்லலாம்.
பைக்கில் செல்லும்போது கண்ணாடி இல்லாமல் செல்லுதல், கணனி திரையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல் மூலம் கண்நோய் மற்றும் கண்ணில் நீர்வடியும்.
கண்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
கண்களைப் பாதுகாக்க ஊட்டச்சத்து மிகவும் அவசியம். காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, இ, இரும்பு மற்றும் கால்சியம் சத்துகள் உள்ள உணவுப்பொருட்களை அதிகமாக சாப்பிட வேண்டும். இவை கண்களை பாதுகாக்கும்.
வைட்டமின் ‘ஏ‘ சத்து பற்றாக்குறையால் தோன்றும் அறிகுறியே மாலைக்கண் நோய். கேரட்டில் வைட்டமின் ஏ உள்ளதால் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம்.
வைட்டமின் ‘ஏ‘ யில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கியச்சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது.
அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கண்ணி, முளைக்கீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
கேரட், பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட்டால் கண்களுக்கு குளுமை பரவும். புத்துணர்ச்சி பெறலாம். பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை சேர்த்துக்கொள்வதன் மூலம் பார்வையை கூர்மையாக்கவும் உதவும்.
0 comments:
Post a Comment