பிரிஸ்பன் டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய முரளி விஜய் 144 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 99 ஓட்டங்களில் முரளி விஜய் பதட்டமடைந்து ஆட்டமிழந்தார். அதனால் இந்த முறை ஓட்டங்கள் பலகையை பார்க்காமல் விளையாடினார். இதனால் அவருக்கு சதம் எடுத்தது கூட தெரியாமல் போய் விட்டது.
இது பற்றி அவர் கூறுகையில், கடந்த முறை நான் 99 ஓட்டங்கள் என்று அறிந்திருந்தேன் ஆனால் சதம் எடுக்கவில்லை, இந்த முறை என் ஓட்டங்கள் என்னவென்றே தெரியாது ஆனால் சதம் கிடைத்தது.
நான் அணியின் ஓட்டங்கள் மற்றும் எனது ஆட்டத்தில் மட்டும் குறியாக இருந்தேன். அஜிங்கிய ரஹானே எதிர்முனையில் இருந்தார். அவர் தான் நான் சதம் எடுத்துவிட்டேன் என்று கூறினார்.
அந்த சமயம் தான் எனக்குப் புரிந்தது. இது ஒருவிதத்தில் நல்லது. நான் எனது ஓட்டங்களை பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் கடந்த போட்டியில் சதம் எடுப்பதில் கவனம் செலுத்தி தான் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தேன்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் எடுப்பதென்பது நமது நம்பிக்கை மட்டத்தை அதிகரிக்கும்.
மேலும் முதல் நாள் ஆட்டத்தில் வெயில் பெரும் சவாலாக அமைந்தது. பவுலர்கள் அசதியடைந்ததை நான் பார்த்தேன். அதனால் தான் நான் பொறுமையாக காத்திருந்தேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment