↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பாகிஸ்தானுடனான ஒரு ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் அவுஸ்திரேலிய அணியின் வீரர் மேக்ஸ்வெல்லின் அபார பந்துவீச்சு அணியை 1 ஓட்டங்களில் வெற்றியடைச் செய்தது.
2014ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அபுதாபியில் அவுஸ்திரேலிய- பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் போட்டியில் மோதின.
3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் 3வது போட்டி வித்தியாசமான முறையில் முடிந்தது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது. பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாத அவுஸ்திரேலிய அணி திக்கித்திணறி 9 விக்கெட்டுகளை இழந்து 231 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது.
232 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் சிறப்பான தொடக்கம் கொடுத்தது. பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டது.
ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ஓட்டங்களை பெற்றிருந்தது பாகிஸ்தான். இரண்டு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி ஓவரை மேக்ஸ்வெல் வீசினார்.
5 பந்துக்கு 2 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற எளிதான நிலையில் மேக்ஸ்வெல்லின் 2வது பந்தை எதிர்கொண்டார் டன்வீர். அவர் அந்த பந்தை சிக்சர் விளாச முயற்சித்து `போல்ட்’ ஆனார்.
இதனால் ஆட்டம் தலைகீழாக மாறியது. அணித்தலைவர் அப்ரிடி கடுப்பான முகத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, ரசிகர்கள் தலையில் கையை வைக்க, முகமது இப்ரான் கடைசி விக்கெட்டாக களமிறங்கினார்.
3,4, 5 பந்தை அடிக்க விடாமல் அசத்தலாக மேக்ஸ்வெல் பந்து வீச, விழிபிதுங்கிய நிலையில் அப்ரிடி வீரர்களின் மோசமான ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.
1 பந்தில் 2 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற நெருக்கடியில் 6வது பந்தை இப்ரான் தூக்கி அடிக்க அது கேட்சாக மாறியது. இதனால் அவுஸ்திரேலியா ஒரு ஓட்டங்கள் வித்தியாசத்தில் திகில் வெற்றி அடைந்தது.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை அவுஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
அதிரடியில் அசத்த மறந்து பந்துவீச்சில் மிரட்டி 1 ஓட்டங்களில் பாகிஸ்தானை வீழ்த்திய அவுஸ்திரேலியாவின் இந்தப் போட்டியும் மறக்க முடியாத ஒன்றே.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top