அவுஸ்திரேலியாவில் காதலியின் உடலை வெட்டி சமைத்த காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் ரிஸ்பேனில் உள்ள டெனரிப் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மார்கஸ் வோக்(Marcus Volke Age-28) என்ற சமையல் கலைஞர் வசித்து வந்துள்ளர்.
இவருடன் இந்தோனேசியாவைச் சேர்ந்த மாயங் பிரசட்யோ (Mayang Prasetyo) என்ற திருநங்கை காதலி வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வோக் தனது காதலியை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.
இதில் சில பாகங்களை சமைத்துவிட்டு மீதமுள்ள பாகங்களை ஒரு பையில் வைத்து குடியிருப்புக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்.
அவர் சமைத்த வாடை வந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஏதோ வித்தியாசமான வாடை வருவதாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், வோக்கை பிடிக்க முயன்றுள்ளனர்.
ஆனால் பொலிசாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்ற அவர், கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து வோக்கின் தாய் டாரத்தி (Darthe) கூறுகையில், என் மகன் ஒரு வாரமாக என்னை தொடர்பு கொள்ளவே இல்லை. அவன் என்ன செய்தான் என்று எனக்கு தெரியாது. அவன் கப்பலில் வேலை செய்ததாக கேள்விப்பட்டேன் என கூறியுள்ளார்.
|
திருநங்கை காதலியை துண்டு துண்டாக வெட்டி சமைத்த காதலன்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.