389 போட்டியில் விளையாடியுள்ள டோனி 629 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார்.
முதல் மூன்று இடங்களில் தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் (998), அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (905), இலங்கையின் சங்கக்காரா (652) உள்ளனர்.
மேலும் பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் 6 பிடியெடுப்புகளை நிகழ்த்தினார்.
இதன் மூலம், ஒரே இன்னிங்ஸில் 6 அல்லது அதற்கு மேல் பிடியெடுப்பு நிகழ்த்திய 4வது அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார்.
இதற்கு முன், வாலி கிராட் (6, பிடியெடுப்பு,1957ம் ஆண்டு), ரோட் மார்ஷ் (6 பிடியெடுப்பு,1982), இயான் ஹீலி (6 பிடியெடுப்பு,1997) ஆகியோர் உள்ளனர்.
இந்த டெஸ்ட் போட்டியில் அஷ்வின் ஓவரில் அவுஸ்திரேலியாவின் வாட்சன் அடித்த பந்தை ஷிகர் தவான் அசத்தலாக பிடியெடுத்தார்.
இதன் பின் இடது தொடையை தட்டி, மீசையை முறுக்கி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். இவருடன் விராட் கோஹ்லியும் துள்ளிகுதித்து மகிழ்ச்சியை கொண்டாடினார்.
0 comments:
Post a Comment