↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
News
கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையிலும், பெண்களுக்கு இடது கையிலும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.
ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.
ஞானிகளும், ரிஷிகளும் தியானம் செய்யும்போது வலது காலை மடக்கி, இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம், இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் செல்லும். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.  வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள்.
மூக்கு குத்துவதன் பயன்கள்:
மூக்கு குத்துவது, காது குத்துவது, துளையிடுவது, போன்றவை உடலில் உள்ள காற்றை வெளியேற்றுவதற்காக செய்யப்படுகிறது.
நாடியை அடக்குவதாக இருந்தால் சுவாசத்தை வலது பக்கத்திற்கு மாற்றவேண்டும். அதுபோல் ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.
நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. ஹிப்போதெலமஸ் பகுதிகளில் நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தி, செயல்படக் கூடிய  சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்களும் உள்ளன. பிரவாகங்களை அதிகமாக செயல்படுத்துவதற்கும்,  வலது பக்க மூளையை நன்றாக செயல்பட வைக்கவும் பெண்ணின் மூக்கில், இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி உதவுகிறது.
இடது பக்கத்தில்  மூளை அடைப்பு ஏற்பட்டால் வலது பக்க மூளை  நன்கு வேலை செய்யும். வலது பக்கம்  அடைப்பு ஏற்பட்டால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். 
இன்றைய  மனித வாழ்க்கையில் அதிகமாக, இடது பக்க மூளையை அடைத்து வலது பக்கமாகவே வேலை செய்ய வைக்கிறோம். அதனால் தான், வலது கை, வலது கால் அனைத்தும் பலமாக உள்ளது.
பெண்கள் மூக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல் சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இந்த விழுதுகள் மூக்குப் பகுதியில் ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும்.
மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி, அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
பருவப் பெண்களுகே, வழக்கமாக மூக்குத்தி அணிவிக்கப்படுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக்கொணருவதற்காக தான் இந்த மூக்கு குத்தப்படுகிறது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன.
இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். மூக்குத்தி சிந்தன சக்தியை நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top