↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பெஷாவர் பள்ளி படுகொலையில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் புகைப்படங்களை தலிபான் தீவிரவாத இயக்கம் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள ராணுவ பள்ளி ஒன்றில் புகுந்த 6 தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 132 குழந்தைகள் உட்பட 145 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் குழந்தைகளை கொன்று குவித்த தீவிரவாதிகளின் புகைப்படங்களை, தங்களது தளத்தில் தலிபான்கள் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தலிபான்கள் கூறியதாவது, வடக்கு வாஜிரிஸ்தானில் எங்களுக்கு எதிராக இராணுவம் எடுக்கிற நடவடிக்கைக்கு பழிக்கு பழிவாங்கத்தான் ராணுவ பள்ளிக்கூடத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தினோம் என்றும் எங்கள் வலியை, வேதனையை அவர்கள் உணர வேண்டும் என விரும்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே ராணுவ தளபதியை திருமணம் செய்து கொண்டதற்காகவே அப்பள்ளியின் முதல்வரை குறிவைத்து கொலை செய்துள்ளதாக, தீவிரவாதிகள் தற்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top