↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
News
டெல்லியில் நடந்த முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தனது மடியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் படத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்ததாக நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
ஒரு காங்கிரஸ் நடிகையாக, விருதுநகரில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட குஷ்பு இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்:
நான் 1987-ல் தமிழ் சினிமாவுக்கு வந்தேன். பிறகு, தமிழகத்தின் மருமகளானேன். என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், என்பதற்காக அரசியலில் இறங்கினேன். நான் கட்சி மாறியதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. அதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை.
நான் சினிமாவில் பெயரும், புகழும் சம்பாதித்து குடும்பத்தை செட்டில் செய்து விட்டுத்தான் கட்சியில் சேர்ந்தேன். சிலரைப்போல் அரசியலில் சேர்ந்து சம்பாதித்து குடும்பத்தை நடத்த கட்சியில் சேரவில்லை. இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் தாய் வீடு காங்கிரஸ்தான். பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசும் உரிமை, காங்கிரஸ் கட்சியைத் தவிர, வேறு யாருக்கு இல்லை. அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திரத்துக்காகப் போராடினார். விடுதலைக்குப் பிறகு தமிழக முதல்வர் ஆனார். ஆனால், இப்போது நிலைமை என்ன, முதலில் முதல்வர் ஆகிறார்கள். பிறகு சேல்ஸ்மேனாகி விடுகின்றனர்.
பா ஜ க மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்துள்ளது. மோடிமஸ்தான் வேலையை காட்டி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஹேப்பி பர்த்டே சொல்கிறார். இன்னும் நரேந்திர மோடியும், ராஜபக்சேவும் ரம்மி விளையாடாததுதான் பாக்கி. 
சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்கள் மீட்டிங் நடந்தது. தமிழகத்தில் இருந்து சென்றவர் மீட்டிங்கில் அவரது கட்சித் தலைவர் போட்டோவை மடியில் வைத்து உட்கார்ந்து கொண்டு இருந்தாராம். இந்தக் கொடுமை தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top