இளையதளபதி விஜய் நடித்த பகவதி படம் மூலம் அறிமுகமானவர் ஜெய். சென்னை 28, சுப்ரமணியபுரம், ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவர் தற்போது வலியவன் படத்தில் நடித்து வருகிறார்.
சென்னையில் இரவு நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஜெய் ராயப்பேட்டையில் உள்ள சாலையில் காரை ஓட்டிச் சென்றார்.
அப்போது வாகனசோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் ஜெய் குடித்து இருப்பது தெரிந்து அவருக்கு அபராதம் விதித்தனர். அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள் ஜெய்யை அடையாளம் கண்டனர். அவரோடு போட்டோ எடுத்துக் கொள்ள முண்டியடித்தார்கள். குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் அவர் சிக்கியதையும் தெரிந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.