இங்கே நட்பு காதலாய் மலர்வதும், காதல் நட்பால் வளர்வதும் இதுநாள் வரையும் திரையில் கண்டு இருக்கிறோம். நட்பு காதலுக்கு எதிரியாய் இருந்தால் என்ன நடக்கும் என்பதை கலக்கல் காமேடியோடு சொல்ல வருகிறது ‘கப்பல்’.
புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கும் இப்படத்தில் காதலுக்கும், நட்புக்கும் இடையே சிக்கி தவிக்கும் இளைஞனாக வருகிறார் வைபவ்.
‘கப்பல்’ அனுபவத்தைக் கூறும்போது,
“என் கதாப்பாத்திரம் இன்றைய இளைஞர்களின் நிலைமையை பிரதிபலிப்பதால் ரசிகர்களை எளிதில் கவரும்.”என்கிறார். தமிழ் சினிமா வரலாற்றிலயே எனது நண்பர்களாக வரும் கருணா, அர்ஜுனன், வெங்கட் மற்றும் கார்த்திக் மட்டும்தான் நண்பனின் காதலுக்கு வில்லனாய் வருபவர்களாக இருக்க முடியும். என் காதலை பிரிக்க இவர்களின் திட்டம் எப்படியெல்லாம் வேலை செய்கிறது என்பதை இயக்குனர் கார்த்திக் மிகவும் நகைச்சுவையாய் கூறியுள்ளார்.
ஹீரோயின் சோனம் பாஜ்வா என்னை அறைவது போல் காட்சியில் என் கன்னம் சிவக்க பல டேக்ஸ் போனார். நானும் ரொம்ப நேரம் வலிக்காத மாதிரிதான் நடிச்சேன். ‘மங்காத்தா’ படத்தில் கூட செம்ம அடி வாங்கினேன். நல்ல பேர் கிடைச்சுது. இப்போ மறுபடியும் அடி, சென்டிமெண்ட் தொடர்ந்தால் சரி. குட்டு பட்டாலும் lady’s finger ல தான் குட்டு வாங்கணும்.
சினிமாவுக்கு வரும்போது ஷங்கர் சாரின் படத்தில் நடிக்க வேண்டும் என எல்லோரையும் போலவே எனக்கும் கடல் அளவுக்கு ஆசைதான். அந்த ஆசை இந்த ‘கப்பல்‘ பயணம் மூலம் நிறைவேறுவது என் பாக்கியமே’‘ என்றார் வைபவ்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.