↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தூத்துக்குடியில் தன் காதலியை பார்க்கவேண்டும் என்ற காரணத்திற்காக, பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பொய் மிரட்டல் விடுத்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகர காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில் பேசிய மர்மநபர், தூத்துக்குடியில் இயங்கும் 4 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு இருக்கிறது, அவை இன்று மாலை 4 மணிக்குள் வெடிக்கும் தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக தூத்துக்குடி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்கள் உதவியுடன் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளிகளில் பொலிசார் சோதனை நடத்தியுள்ளனர்.

சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருட்களும் சிக்காததால் தொலைபேசி மிரட்டல் புரளி எனத் தெரியவந்துள்ளது.
பின்னர் அந்த தொலைபேசி எண் தூத்துக்குடி வட்டக்கோயில் அருகே உள்ள ஒரு பொதுத் தொலைபேசி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்குள்ள தனியார் பள்ளியின் வாசலில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கமெராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்மநபர் ஒருவர் மோட்டார் பைக்கில் வந்து தொலைபேசி மூலம் பேசிவிட்டு 10 நொடிகளுக்குள் அந்த இடத்தைவிட்டு செல்வது பதிவாகியிருந்தது.

அதில் பதிவான பைக் எண்ணை வைத்து, மிரட்டல் விடுத்த தூத்துக்குடி, அன்னை தெரசா காலனியை சேர்ந்த பீட்டர் மகன் கிளாரன்ஸ் (20) என்பவரை கைது செய்து விசாரித்துள்ளனர்.

விசாரணையில், கிளாரன்ஸ் அப்பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரைக் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.
தற்போது அரையாண்டு தேர்வு நடந்து வருவதால் காதலியை சந்திக்க முடியாத காரணத்தால், பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் அளித்தால் விடுமுறை அளிக்கப்படும் என நினைத்து அவசர எண் 100-க்கு அழைத்துள்ளார்.

மேலும், அப்போது தூத்துக்குடி மாவட்ட அவசர எண் பிஸியாக இருந்ததால் அந்த அழைப்பு தானாகவே நெல்லை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றதாக தெரியவந்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top