↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

டிவிட்டர் பக்கத்தை ஆரம்பித்த ஒரு நாட்களிலேயே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்டவர் ரஜினிகாந்த். அவர் டிவிட்டர் பக்கத்தை ஆரம்பித்த சில நாட்களுக்கு கோச்சடையான் படத்தை பற்றியும், தனது மகள் செளந்தர்யாவிற்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவிக்க மட்டுமே பயன்படுத்தினார். அவர் கடைசியாக டிவிட்டரில் கருத்து பதிவு செய்தது மே 23ம் தேதி.

கடந்த ஐந்து மாதங்களாக வேறு எந்த பதிவையும் போடவில்லை. மேலும் அவரது ரசிகர்கள் லிங்கா படம் பற்றி ஏதாவது தலைவர் போடுவார் என்று காத்திருந்தனர். ஆனால் லிங்கா படத்தை பற்றியும் இதுவரை ரஜினிகாந்த் எந்த பதிவையும் போடவில்லை.அதோடு நேற்று லிங்கா படத்தின் டீஸர் வெளியானது. ரஜினிகாந்த் லிங்கா டீஸரையாவது தனது டுவிட்டர் பக்கத்தில் போடுவார் என்று அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். 

ஆனால் இன்று காலை வரை லிங்கா படத்தை பற்றிய ஒரு தகவலையும் போடவில்லை.படத்தை பற்றிய பதிவாக ஒரு வார்த்தைக் கூட இல்லாதது ரசிகர்களை மிகவும் ஏமாற்றமடைய வைத்திருக்கிறது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top