↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கங்கையை சுத்தப்படுத்தும் பணியை பிரதமர் நரேந்திரமோடி இன்று வாரணாசியில் துவக்கி வைத்தார், முன்னதாக, அவர் கங்கைக்கு வழிபாடு நடத்தினார்.
கடந்த லோக்சபா தேர்தலில், குஜராத்தில் வதோதரா, உ.பி.யில் வாரணாசி என இரு தொகுதிகளில் நரேந்திரமோடி போட்டியிட்டார். வாரணாசி தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய மோடி, 'கங்கை எனது தாய் போன்றது. அதை புனிதப்படுத்துவது எனது கடமை,' என்றார். இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற மோடி, வதோதரா தொகுதி லோகசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தனது மனதுக்கு மிகவும் பிடித்த வாரணாசி தொகுதியின் உறுப்பினராக இருந்து, பிரதமராக பொறுப்பேற்றார். பதவி ஏற்றவுடன் முதல் வேலையாக, கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மேலும், மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில், கங்கையை சுத்தப்படுத்தும் அமைச்சர் குழு ஒன்றையும் ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் நடந்து, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
பணியை துவக்கி வைத்தார்: இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக வாரணாசி சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ஆசி கட் பகுதியில் கங்கையை சுத்தப்படுத்தும் பணியை துவக்கி வைத்தார். முன்னதாக, அவர் கங்கைக்கு வழிபாடு நடத்தினார். பின்னர், கங்கை கரையில் சுத்தப்படுத்தும் பணியை முறைப்படி துவக்கி வைத்தார்.
முன்னதாக அவர் கூறுகையில், 'கங்கை நதியை தூய்மை ஆக்கும் திட்டத்தில் எனது அழைப்பை ஏற்று வந்துள்ள உள்ளூர்வாசிகள் அனைவருக்கும் எனது நன்றி. அடுத்த 3 மாதங்களில் இப்பகுதியில் கங்கையை முழுமையாக தூய்மைப்படுத்த உள்ளதாக சமூக அமைப்புக்கள் பல உத்தரவாதம் அளித்துள்ளன. கங்கையை சுத்தப்படுத்தும் பணியை துவக்கி வைத்துள்ள நிலையில், உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ், சுவாமி ராம் பத்ராச்சார்யா, நடிகர் மனோஜ் திவாரி, எழுத்தாளர் மானு சர்பா, கிரிக்கெட் வீரர்கள் முகம்மது கைப் மற்றும் சுரேஷ் ரெய்னா , பேராசிரியர் தேவிபிரசாத் திவேதி, டிவி நடிகர் ராஜு ஸ்ரீவத்சவா மற்றும் பாடகர் கைலாஷ் கெர் ஆகியோரையும் இந்த பணியில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளேன்,' என்றார். மோடியின் இந்த அழைப்பை கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளார். பிரதமரின் அழைப்பு தனக்கு மிகப்பெரிய கவுரவம் என்று கூறியுள்ள ரெய்னா, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி முடிந்த பின், உ.பி.,யில் கிளீன் இந்தியா திட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment