↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கருப்பு பணம் வைத்திருப்போர் பட்டியலில் உள்ள 289 பேரின் கணக்கில் பணமே இல்லை என்ற விவரம் தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் சிறப்பு புலனாய்வு குழு திணறி வருகிறது.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விசாரணையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற நீதிபதிகள் எம்.பி.ஷா, அரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழு, சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்புடன் செயல்பட்டு வருகிறது. 

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள 600-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர் அடங்கிய பட்டியல், பிரான்ஸ் நாடு மூலமாக இந்தியாவுக்கு ஏற்கனவே கிடைத்தது. அந்த பட்டியலை உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில், அந்த பட்டியலை ஆய்வு செய்தபோது, பட்டியலில், 289 பேரின் வங்கி கணக்கில் பணமே இல்லை என்று சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்துள்ளது. 

அதிலும், அவர்களில் 122 பேரின் பெயர்கள், அதே பட்டியலில் இரண்டாைவது முறையாக இடம்பெற்றுள்ளன. ஞ மேலும், இந்த கணக்குகளை இயக்கியது தொடர்பாக எந்த விவரங்களும் இல்லை. அந்த கணக்குகள் எப்போது தொடங்கப்பட்டது, எப்போதெல்லாம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது என்பன போன்ற விவரங்களும் இல்லை. 

கறுப்புப் பண விவகாரம் குறித்து பல ஆண்டுகளாக பேசிக் கொண்டிருந்த அரசு மிக மிகத் தாமதமாக நடவடிக்கையில் இறங்கியதால், அதற்குள் விழித்துக் கொண்டு கணக்குகளை காலி செய்துவிட்டனர் கறுப்புப் பண முதலைகள். இப்போதைய நிலவரப்படி 300 பேர் மீது மட்டும்தான் இந்த சிறப்புக் குழுவால் நடவடிக்கை எடுக்க முடியும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top