தல 2004ம் வருஷம் கொடுத்த சூடான பேட்டி , இது தலயோட ஆஞ்சநேயா படம் ரிலீஸ் ஆனா போது, ஜி படம் ஷூட்டிங் நடந்த சமயம் வந்தது.
கேள்வி: ஆஞ்சநேயா படம் பாத்தீங்களா?
பதில்: படம் பாத்தேன், நான் ஏர்போர்ட்டிலிருந்து நேரா தியேட்டருக்கு போயிருந்தேன், படத்திற்கு வரவேற்பு எப்படி என்பதை பார்க்க, ஆனால், நான் மிகுந்த சோர்வாய் இருந்ததால் பாதியிலேயே தூங்கி விட்டேன்.
(படம் ரிலீஸ் ஆன முதல் நாள் முதல் ஷோவிலேயே படம் சூப்பர் ஹிட் என கதை விடுபவர்கள் மத்தியில் தல.....?)
கேள்வி: தேவையில்லாத இடைவெளியே உங்கள் படங்கள் தோல்வி அடைகின்றன என்பது பற்றி?
பதில்: பாத்திங்கல்ல என்னோட தலையீடு இல்லாத படங்களின் நிலைமையை? நான் படங்கள் விஷயங்களில் தலையிடுகிறேன்னு சொன்னவங்கத்தான் இன்னைக்கு இதையும் சொல்றாங்க.40 நாள் தொடர்ந்து கஷ்டப்பட்டு நடிச்சு கொடுத்தேன் ரேஸ் போட்டிகளுக்கு போவதற்கு முன்னர். என்னோட படங்களின் ரஷ் பாத்துட்டு என் கருத்துக்களை சொல்வேன். சில பேர் ஏத்துப்பாங்க, சில பேர் அதுக்கான விளக்கம் தருவாங்க, ஆனால் இந்த இயக்குனர் என்னிடம் ரஷ் காமிக்கவே இல்லை. எப்போ கேட்டாலும் கவலை படாதிங்க சார்..படம் சூப்பர் ஹிட் ஆவுமுன்னு சொல்லியே ஏமாத்திட்டார். நான் நல்ல பாடம் கற்று கொண்டேன்.
கேள்வி: உங்களோட ரேஸ் மீதான ஆர்வம்தான் படங்களின் தோல்விக்கு காரணமா?
பதில்: நிச்சயமா இருக்க முடியாது. ரேஸ் வேறு சினிமா வேறு. ரெண்டையும் நான் மிக்ஸ் செய்வதே இல்லை. என் பட வேலைகளை முடித்த பின்னர்தான் நான் ரேஸ் போட்டிகளுக்கே போகிறேன்.
கேள்வி: அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கதான்னும், அதுக்கான முதல் முயற்சியே ஆஞ்சநேயான்னும் சொல்லியிருந்தின்களே?
பதில்: ரஜினி எனக்கு மிக மிக பிடித்த நடிகர். அவர் சொன்னது போல சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது ஒரு பதவின்னா, அந்த பதவி எனக்கும் ஒருநாள் வரணும். ஆஞ்சநேயா பெயிலியர் ஆயிட்டதால் சூப்பர் ஸ்டார் பட்டம், அதற்கான முயற்சி கை நழுவி போயிட போறதில்லை. அமிதாப் பச்சனும் 90 கோடியை இழந்து நின்னப்போ எல்லாரும் சொல்லியதுதான் அமிதாப் முடிஞ்சாருன்னு ஆனால் அதுக்கு பின்னத்தான் விஸ்வருப வெற்றி கிடைச்சது. அது போல இன்று ஆஞ்சநேயா பெயிலியர் ஆனாலும், சூப்பர் ஸ்டார் பட்டம் ஒரு நாள் தேடி வரும் அதற்கான முயற்சியும் தொடரும்....
பாகம் 2 ஐ படிப்பதற்கு
..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment