↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரீதேவி 70களின் கடைசியில் தமிழ், மற்றும் தெலுங்கு மொழிகளில் நாயகியாக உயர்ந்து குறுகிய காலத்திலேயே இரு மொழிகளிலும் நம்பர் 1 நடிகையாக பல வருடங்கள் இருந்தார். இரண்டு மொழிகளிலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர் அப்படியே ஹிந்தித் திரையுலகில் அறிமுகமாகி அங்கும் மிகவும் புகழ் பெற்று இந்திய அளவில் நம்பர் 1 நடிகை என்ற உச்சத்தை அடைந்தார். 

ஹிந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு, இரு பெண் குழந்தைகளுக்குத் தாயானதைத் தொடர்ந்து சுமார் 15 வருடங்களாக திரையுலகம் பக்கம் திரும்பாமலேயே இருந்தார்.இரண்டு வருடங்களுக்கு முன் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படம் மூலம் மீண்டும் ஹிந்தித் திரையுலகிற்கு நடிக்க வந்தார். அந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. 

தற்போது விஜய் அடுத்து நாயகனாக நடிக்க உள்ள படத்தில் ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கப் போகிறார். அதோடு ஸ்ரீதேவியை தெலுங்குத் திரையுலகில் நாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் ராகவேந்திர ராவ் இயக்கத்தில் ஒரு தெலுங்குப் படத்திலும் நடிக்கப் போகிறாராம். அவரது இயக்கத்தில் ஸ்ரீதேவி இதுவரை 24 படங்களில் நடித்திருக்கிறார். 

இவர்களின் அடுத்த படைப்பு அந்தக் கூட்டணியின் 25வது படம் என்ற சிறப்புடன் உள்ளதால் படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்க வேண்டும் என்று இயக்குனர் ராகவேந்திர ராவ் முடிவெடுத்திருக்கிறாராம். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top