↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கத்தி படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாட விஜய் இன்று டுவிட்டரில் கலந்துரையாட வந்தார். இதில் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு கேள்விகளையும் தொடுத்தனர்.இதற்கு பொறுமையாக பதில் அளித்தார் விஜய். இதன் முழு விவரம் இதோ உங்களுக்காக...

கேள்வி: உங்களை ரோல் மாடலாக கொண்டு பல இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் உங்களை போல் வாழ்க்கையில் முன்னேற என்ன செய்ய வேண்டும்?
பதில் : உழைத்திடு, உயர்ந்திடு உன்னால் முடியும்

கேள்வி : உங்கள் ரசிகர்கள் பற்றி கூறுங்கள்?
பதில் : வெற்றியில் என்னிடம் ஒட்டிக் கொண்டவர்கள் அல்ல தோல்வியில் என்னை தட்டிக் கொடுத்தவர்கள் என் ரசிகர்கள் ...நடிகன் ரசிகன் தாண்டிய உறவு எங்களூைடயது...

கேள்வி : சமீபத்தில் உங்கள் மனம் கவர்ந்த படம் எது?
பதில் : ஜிகர்தண்டா, த்ரிஷயம்(மலையாளம்)

கேள்வி : எந்தவொரு கஷ்டமான தருணங்களையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?
பதில் : அமைதியாக இருந்தாலே போதும்.

கேள்வி: உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு தேவையான அனைத்து கிடைத்து விட்டது அடுத்து என்ன?பதில்: ரசிகர்களுக்கு திருப்பி கொடுக்கும் நேரம், என் அன்பை...கண்டிப்பாக கொடுப்பேன்.

கேள்வி: உங்களுக்கு நிறைய எதிரிகள் உள்ளார்களே?
பதில்: என் எதிரிகளையும் நான் நேசிப்பேன்

கேள்வி: புதுமுக இயக்குனருக்கும் வாய்ப்பு தரமாட்டீங்களா?
பதில்: இதுவரை நான் நடித்த 58 படத்தில் 28 படம் புதுமுக இயக்குனர்கள் தான். ஓகேவாண்ணா..

கேள்வி: நாம் பயப்புடுகிறோமா? அல்லது பதுங்கிகிறோமோ?
பதில்: இரண்டும் இல்லை அனுபவங்களை தேடுகிறோம்.

கேள்வி: உங்களையே சமீப காலமாக சர்ச்சைகள் குறி வைக்கின்றன ஏன்?
பதில்: என மனதை பாதிப்பதில்லை, ஆனால் இப்படங்களில் என்னுடன் பணியாற்றும் தொழிலாளர்களை நினைத்து வருத்தப்படுவேன். அவர்கள் உழைப்பை சுரண்டுகிறார்களே என்று.

கேள்வி: இன்னும் 10 வருஷம் கழிச்சு எந்த இடத்தில் இருப்பீங்க?
பதில்: என் கடமையை செய்கிறேன்...வேறு எந்த ப்ளானும் இல்லை.

கேள்வி: நீங்களே கோல விளம்பரத்தில் நடித்துவிட்டு, படத்தில் அதை தடை செய்ய சொல்லி வசனம் பேசுனீங்களே?
பதில்: நான் மட்டும் இல்லை இந்தியாவில் மிகப்பெரிய பிரபலங்களான அமீர் கான், சச்சினே நடித்தார்கள். கத்தி படத்திற்கு பிறகு இனி இது போன்ற விளம்பரங்களில் நடிக்கப்போவதில்லை. என் தவறை நானே திருத்தி கொள்வேன்.

கேள்வி: உங்களுக்கு இளைய தளபதி பட்டம் வேண்டுமா? சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டுமா?
பதில்: உங்கள் அன்பு மட்டும் போதும், எந்த பட்டமும் வேண்டாம்.

கேள்வி: கத்தி படம் பற்றி கூறுங்கள்?
பதில்: படம் வராதுன்னு சொன்னாங்க, தியேட்டல் ஜன்னல உடைச்சாங்க, 12 மணி வரைக்கும் டிக்கெட் ஓபன் ஆகல. ஆனால், எண்ணி 12வது நாள் படம் ரூ 100 கோடி வசூல்ன்னு சொல்றாங்கஇவ்வாறு ரசிகர்கள் கேட்ட பெருமபாலான 

கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்து விட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top