பாகம் 1 ஐ படிப்பதற்கு
கேள்வி: தேவை இல்லாம சினிமாவை விட்டுட்டு ரேஸ் அது இதுன்னு போயி தன் நிலையை சினிமாவில் தொலைத்துவிட்டார் எனும் பேச்சுக்கள்.....
பதில்: செம சூடாகி...சொல்லுறவங்க சொல்லிட்டு போகட்டும், நான் ஒரு பீனிக்ஸ் பறவை போல....அவர்கள் சொல்லும் அனைத்தையும் தவறு என்று நிருபிப்பேன். எனக்கு பணம் முக்கியம் இல்லை, அப்படி பணம்தான் முக்கியம் என்றால் வருஷத்துக்கு ரெண்டு படம் மட்டுமே நடிக்க வேண்டியதில்லை, எனக்கு வரும் வாய்ப்புகளுக்கு வருஷம் 5 படங்களுக்கும் மேல நடிக்க முடியும். ஆனாலும் நல்லதா தேர்ந்தெடுத்து வருஷத்துக்கு ரெண்டு நடிச்சாலே போதுமுன்னு நினைக்கிறேன், மிச்ச நேரங்களில் என் சிறு வயது ஆசை மற்றும் கனவுமான ரேஸ் போட்டிகளில் பங்கெடுக்க நினைக்கிறேன் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில். என்னை தூற்றும் வேலையை செய்யும் ஒரு குருப் இங்கே இருக்கு, நாளைக்கு என்னிடம் தேதி கேட்டு முதலில் ஓடி வந்து நிக்க போவதும் அதே குருப்புதான். நான் அவர்களுக்கு தேதி கொடுக்கவில்லைன்னா அஜித் அவ்வளவுதான்னு சொல்ல போவதும் அவர்கள்தான், என்னை அழிக்க நினைப்பவர்களிடம் மோதி பாத்திடலாமுன்னு முடிவு பண்ணிட்டேன்.
கேள்வி: மோதலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதில்: நன்றி
கேள்வி: புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து உற்சாக படுத்துவீங்க, அதுக்கு என்னாச்சு?
பதில்: அம்னீசியா.
கேள்வி: யாருக்கு?
பதில்: சில நன்றி மறந்தவர்களுக்கு.
கேள்வி: ரேஸ் ஆபத்து இல்லையா?
பதில்: எதில்தான் ஆபத்து இல்லை. நான் என்னோட பணத்தை செலவு பண்ணித்தான் கலந்துக்குறேன், இதுல ஆபத்துன்னா அது எனக்கு மட்டும்தான் மத்தவங்க பணத்துக்கு இல்லை.
..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment