ஹீரோவாகும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட ‘பென்சில்’ படக்குழுவினருடன் இறுதிக்கட்ட பாடலைப் படம்பிடிக்க, ஜப்பான் போன கதை தெரியும்தானே..? அங்கே மொத்த குழுவினரும் கடும் சூறாவளியில் சிக்கிக் கொண்ட தகவல் இன்று வந்திருக்கிறது.
ஜப்பானில் உள்ள ‘யட்சுகடகே’ எனும் மலை உச்சியில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டிருக்க, படக்குழுவினர் ‘விஞ்ச்’ மூலம் மலை உச்சிக்குச் சென்றனராம். அப்போது ஏற்பட்ட ‘நூரி’ எனும் கடும் சூறாவளி காரணமாக அப்போது மலை உச்சியில் கடும் குளிர் நிலவியதாம்.
பிராண வாயு பற்றாக்குறையால் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. கதாநாயகி ஸ்ரீதிவ்யாவுடன் சென்றிருந்த அவரது அம்மாவின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், படக்குழுவுடன் இருந்த தயாரிப்பாளர் மருத்துவர் என்பதால் உடனடியாக முதலுதவி அளித்துள்ளார்.
ஸ்ரீதிவ்யாவின் அம்மாவை அடுத்து மற்றவர்களும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில், படப்பிடிப்பு நடத்துவதே மிகப் பெரிய சவாலாக இருக்க, அனைவரின் ஒத்துழைப்புடன் திட்டமிட்டபடி காட்சிகளை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் மணி நாகராஜ்.
ஒருவழியாக, படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர்.
ஸ்ரீதிவ்யாவின் அம்மாதான் பாவம்… மகளுடன் ஜப்பான் போய் மருந்து, மாத்திரையுடன் திரும்பிய கொடுமையான அனுபவத்தை வாழ்நாளில் மறக்க மாட்டார்..!
0 comments:
Post a Comment