ஐ படத்தின் தெலுங்கு உரிமையை ஆர்.பி.சௌத்ரியும், என்.வி.பிரசாத்தும் இணைந்து வாங்கியுள்ளனர். இந்திய சினிமா சரித்திரத்தில் ஒரு படத்தின் டப்பிங் உரிமை அதிக விலைக்கு விற்கப்பட்டது இதுதான் என்கிறார்கள்.
ஐ தெலுங்கு டப்பிங் உரிமைக்கு தரப்பட்டிருப்பது அதிகமில்லை ஜென்டில்மேன்.... 30 கோடிகள்.
ஐ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் எகிறுகிறது. படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட சில மணி நேரங்களில் 23 லட்சம் பேர் பார்த்தனர். கோச்சடையான், லிங்கா போன்ற ரஜினியின் படங்களைவிட இது ஒன்றரை மடங்கு அதிகம். அதேபோல் படத்தின் ஆடியோவும் ரிக்கார்ட் பிரேக் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. தற்போது தெலுங்கு டப்பிங் உரிமை 30 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளது.
ஐ வெளியாகும் முன்பே இன்னும் பல சாதனைகள் படைக்கும் என்பதற்கான முன்னோட்டம்தான் தெலுங்கு பதிப்பின் பிரமாண்ட விற்பனை.
0 comments:
Post a Comment