கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் என்னை அறிந்தால் படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அப்போது ட்விட்டரில் #YennaiArindhaal என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்வீட் பண்ணியதன் மூலம் அதை உலகளவில் டிரென்ட் செய்தார்கள் அஜித் ரசிகர்கள். அவர்கள் வழியில் தற்போது விஜய் ரசிகர்களும் களத்தில் இறங்கி உள்ளனர். அஜித் ரசிகர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என விஜய் ரசிகர்களும் களத்தில் குதித்து கலக்க ஆரம்பித்துள்ளனர். இவர்கள் கொண்டாட என்ன விஷயம் இருக்கிறது?
கத்தி படம் வெளியாகி 12 நாட்களில் உலகமெங்கும் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட் பண்ணினார். அதைப் பார்த்த இசையமைப்பாளர் அனிருத்தும் அந்த தகவலை, ட்வீட் பண்ணினார். வழமைபோலவே இம்முறையும் விஜய் படம் 100 கோடி தாண்டிவிட்டது என்ற நம்பிக்கையில், குறைந்த நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்த சாதனையை உலகம் அறியச் செய்ய வேண்டும் என முடிவெடுத்துவிட்டனர் விஜய் ரசிகர்கள். எனவே #Kaththihitsfastest100cr என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பரபரப்பாக ட்வீட் செய்து வருகிறார்கள்.
விஜய் ரசிகர்களின் சுறுசுறுப்பு காரணமாக #Kaththihitsfastest100cr என்ற ஹேஷ்டேக் சென்னை, இந்திய டிரென்டில் முதலிடம் பிடித்துவிட்டது. ஆனாலும் உலகளவில் ரெண்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோக இதை பார்த்த பொது ரசிகர்கள் விஜய்ட படமெண்டாலே 100 கோடி என்ற புரளிகள் எப்பவுமே வந்தவண்ணமிருக்கும். எவ்வளவு காலத்துக்குத்தான் அப்பாவித்தனமாயே விஜய் ரசிகர்கள் இதையெல்லாம் நம்பிட்டு இருக்கப்போறார்கள் என்று சலிப்படைந்தார்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.