குத்து ரம்யா திடீர் மாயமானதால் பரபரப்புஎழுந்துள்ளது.‘குத்து',‘வாரணம் ஆயிரம்' படங்களில்நடித்திருப்பவர் ரம்யா. கன்னடத்தில் பல்வேறுபடங்களில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு இவர்காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கர்நாடக மாநிலம்மாண்டியா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில்போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்துதீவிர அரசியலில் இருந்து விலகி நடிப்பில் கவனம்செலுத்தினார். இந்நிலையில் கடந்த சில மாதமாகபடவுலகம் பக்கமும், அரசியல் பக்கமும்தலைகாட்டாமல் இருக்கிறார் ரம்யா.
எப்போதும் இணையதள பக்கத்தில் தனது கருத்தைவெளியிட்டுக்கொண்டிருந்தவர் திடீரென்று அதிலும்ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார். ரம்யாவைகாணவில்லை என்று இணைய தள பக்கங்களிலும் தகவல்கள் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையிலும் அவர் எங்குஇருக்கிறார் என்று தெரியாமல் திரையுலகில் பரபரப்பு எழுந்துள்ளது. இது பற்றி சிலர் கூறும்போது, லண்டனுக்குசென்றிருக்கும் ரம்யா அங்கு தனது தாயுடன் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அரசியல் பட்டப்படிப்பு படிக்கஉள்ளேன் என்று சில மாதங்களுக்கு முன் ஒரு பேட்டியில் ரம்யா குறிப்பிட்டிருந்தார். அதற்காக அவர் லண்டன்சென்றிருக்கிறாரா என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.